சமீபத்தியசர்வதேசமுக்கிய செய்திகள்

கட்டிடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிழப்பு!

இந்தியாவில் மும்பை நகரில் இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் ஒன்று கனமழையினால் புதன்கிழமை இரவு இடிந்து விழுந்ததில் 8 குழந்தைகள் உள்பட 11 பேர் உயிரிழந்தனர். 7 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மகாராஷ்டிரம் மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை புதன்கிழமை பெய்ய தொடங்கியது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை மதியம் முதல் கனமழை பெய்தது.

இந்தநிலையில் மும்பை மாலட் மேற்கு பகுதியில் இருந்த இரண்டு அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் புதன்கிழமை இரவு 11.10 மணி அளவில் கனமழையினால் இடிந்து விழுந்தது. இரண்டு தளம்கொண்ட குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் காயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியானதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதன்பின்னர் பொலிஸார், தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது மேலும் 2 சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Related Articles

Back to top button