சமீபத்தியமருத்துவம்

ஆரோக்கிய டயட்

வீடு அழகாக இருக்க வேண்டுமெனில், உள் கட்டமைப்பை சீர்படுத்தி, ஆங்காங்கே அலங்காரப் பொருட்களை வைத்து அழகுபடுத்தி செப்பனிடுகிறோம். அதுபோல் நம் உடல் வலிமை பெற, உள் உறுப்புகள் சீராக இயங்க சமச்சீரான உணவு அவசியம். நல்ல உணவே உடலுக்கு சக்தியையும், உற்சாகத்தையும் கொடுக்கும். அந்த உணவு முறைகளை கையாளும் விதத்தைப் பற்றி இதில் பார்ப்போம்…

*உணவில் சுவையும், மணமும் தூக்கலாக இருக்கும்போது குறைவாக சாப்பிட்டாலும் வயிறு நிறைந்து விடுகிறது என்கிறார்கள் நிபுணர்கள். எனவே பிடித்த உணவை மிகுந்த சுவையோடு சமைத்து சாப்பிட வேண்டும்.

*ஆரோக்கியமான டயட் சாப்பிடுபவர்களுக்கு சத்துக்குறைபாடு ஏற்படுவதில்லை. தொற்று நோய்கள் வருவதில்லை. ‘சத்தான உணவு சாப்பிட்டால், 80 சதவிகித நோய்களைத் தடுக்கலாம்’ என உலக சுகாதார நிறுவனமே கூறுகின்றது.

*ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கமும், உடற்பயிற்சி இல்லாததுமே உலகின் மிக முக்கியமான சுகாதாரப் பிரச்னைகள் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. இதனால் ஏற்படும் உடல்நலக்கோளாறுகளை சரி செய்வதே பல நாடுகளுக்குப் பெரும் பிரச்னையாக உள்ளது.

*கால்சியம், புரதம், மினரல்கள் உள்பட பல சத்துக்களைத் தருபவை பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள். பால், மோர், தயிர் என இவை நாம் அன்றாடும் சாப்பிடும் உணவில் ஆறில் ஒரு பங்காவது இருக்க வேண்டும்.

*நாம் சாப்பிடும் தினசரி உணவில் மூன்றில் ஒரு பங்கு காய்கறிகளும், பழங்களும் இருக்க வேண்டும். அதேபோல் அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் சார்ந்த உணவும் மூன்றில் ஒரு பங்கு சாப்பிட வேண்டும்.

*தினம் தினம் வெவ்வேறு வகையான உணவுகளைச் சாப்பிட்டால், உடலுக்கு எல்லா சத்துக்களும் சரிவிகிதத்தில் கிடைக்கும்.

Related Articles

Back to top button
கோவிட்19 பரவல்