சமீபத்தியசர்வதேச

தமிழக தேர்தல் கலம்

தமிழக தேர்தல்!

யார் வெற்றி பெறவேண்டும் என்பதைவிட யார் வெற்றி பெறக்கூடாது என்பதுவே தமிழ்நாட்டு தேர்தலில் முக்கியம் என நினைக்கின்றேன் ஆனால் இம்முறையும் அது சாத்தியப்படாது.

திமுக வெற்றி ஓரளவு உறுதியாகிவிட்டது அடுத்த இடத்தில் அதிமுக தான். இந்த இரண்டு கட்சிகளையும் தமிழ்நாட்டில் இருந்து அகற்றுவது கஷ்டம் ஆனால் இம்முறை அதிமுக தோற்கும் பட்சத்தில் அது உடைந்து அதிலிருக்கும் பலர் வேறு கட்சிகளுக்கு போகும் சாத்தியம் உள்ளது.

எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற ஆழுமைகள் தான் அதிமுக, அவர்கள் இல்லாத நிலையில் இன்னொருவர் அந்த இடத்திற்கு அருகில் கூட வரமுடியாத நிலையில் அடுத்த தேர்தலுக்கு தாக்குப்பிடிக்குமோ என்று சந்தேகமாகவேயுள்ளது.

திமுக ஊழல்,குடும்ப ஆட்சி இரண்டையும் தவிர்த்துவிட்டால் ஓரளவு நல்ல கட்சி தான். அவர்களால் மட்டுமே தற்போது உண்மையில் ஒரு நல்லாட்சியை கொடுக்கமுடியும். அடுத்த ஐந்து வருடங்களுக்கு அவர்கள் எப்படி ஆட்சி செய்கின்றார்களோ அதுவே அடுத்த தேர்தலில் அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும். அதுவும் உதயநிதியை பார்க்க தூக்கி ஒரு உழக்கு உழக்கவேண்டும் போலிருக்கு, திமுக திருந்தி ஆட்சி செய்யும் என்று யாரும் நினைத்தால் அது நடக்கவே நடக்காது.பதவி வர மீண்டும் ஊழல் அடாவடி தொடங்கிவிடும்.

மாற்று கட்சிகளின் நிலை.

உருப்படியாக எதுவும் இல்லை.
வை கோ,ராமதாஸ் ,விஜயகாந்த் ,கொங்கிரஸ் ,பாகஜ யாருடனும் ஒட்டிகொண்டு பத்து பன்னிரெண்டு ஆசனங்கள் கேட்கும் கட்சிகளாகிவிட்டன.

எஞ்சியிருப்பது கமலும் சீமானும் தினகரனும் தான்.

கமலின் வயதும் மேதாவித்தனமும் இந்த தேர்தலுக்கு பிறகு ஆள் இல்லாமல் போனாலும் ஆச்சரியமில்லை.
பேரு மய்யம் வாய்குள்ள போகுதில்லை.

சீமான் ஐந்தறிவுள்ள ஒரு ஆழுமை. மக்கள் மிருகங்கள் பறவைகள் செய்யும் சேட்டைகளை விரும்பி பார்பதுபோலத்தான் சீமானையும் பார்க்கின்றார்கள். குரங்கு சேட்டைகள் செய்யும் போது கை தட்டினால் இன்னும் ஒரு குத்துக்கரணம் போடும் சீமானும் யாரும் விசில் அடித்தால் வாயிலை வாறதை எல்லாம் விட்டுதள்ளுகின்றார். அதை ரசிக்க ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்யுது.

தினகரன், திமுகவிற்கு அடுத்த தேர்தலில் சவாலாக இருக்கப்போகின்றவர் இவர்தான் என நம்புகின்றேன். பணபலம், ஒருவித ஆழுமை , நிதானம், உடையப்போகும் அதிமுக எல்லாம் இவரது பலம்.முகத்தில் கள்ளத்தனம் ஒன்று ஒழிந்திருக்கு இது அரசியலுக்கு ரொம்ப முக்கியம்.

அடுத்து ஆட்சி செய்யப்போகும் திமுக வின் செயற்பாடுகள்தான் அதற்கடுத்த ஆட்சி யார் என்பதை தீர்மானிக்கும்.

Related Articles

Back to top button
கோவிட்19 பரவல்