சமீபத்தியமலையகம்

மலையக மக்கள் முன்னணியின் மே தினம் இறம்பொடை ஆஞ்சநேயர் ஆலயத்தில்!

மலையக மக்கள் முன்னணி மற்றும் மலையக தொழிளார் முன்னணியின் மேதின நிகழ்வு இன்று (01) இறம்பொடை ஸ்ரீ பக்த ஆஞ்சனேயர் ஆலயத்தில் விஷேட பூஜைகள் சுகாதார கட்டுபாடுகளை பின்பற்றி நடைபெற்றது.

இதன்போது தொழிலாளர்களுக்கும் தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கபட்டிருப்பவர்களுக்கும் ஆசி வேண்டி பூஜைகள் நடைபெற்றது.

நிகழ்வில் முன்னணயின் தவைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி வே.இராதாகிருஸ்ணன் முன்னணியின் செயலாளர் நாயகம் பேராசிரியர் எஸ்.விஜேசந்திரன் தொழிலாளர் முன்னணியின் செயலாளர் கே.சுப்பிரமணியம் நிதிச் செயலாளர் விஸ்வநாதன் புஸ்பா முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான ஆர்.ராஜாராம் உட்பட முன்னணியின் உயர் உறுப்பினர்களும் தோட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டார்கள்.

Related Articles

Back to top button
கோவிட்19 பரவல்