உள்நாட்டுசமீபத்தியமலையகம்

தென்பகுதி பெருந்தோட்டப்பகுதிகள் வீட்டுறுமை, காணியுரிமை தொடர்பாக விஷேட கவனம்!!

சர்வதேச தொழிலாளர் தினத்தில் இன்று பெருந்தோட்ட மக்கள் குரல் அமைப்பு விஷேட ஊடகவியலாளர் சந்திப்போன்றை தெனியாய பிரதேசத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
இதன் போது பொதுவாக மலையக மக்களின் வீட்டுறுமை,காணியுருமை தொடர்பாக விஷேட கவணம் செலுத்தப்படுவதாக பெருந்தோட்ட மக்கள் குரல் அமைப்பின் தலைவரும்,தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் வட,கிழக்கு இணைப்பாளருமான அன்டனி ஜேசுதாஸசன் கருத்து தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் கருத்து தெரிவிக்கையில்.மக்கள் தங்களது வாழும் மக்கள் தங்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்காக முக்கியமாக கண்டி,நுவரெலிய,மாத்தளை,ஹட்டன் மற்றும் தலவாக்கலை ஆகிய பிரதேசங்களில் பொதுவாக ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடாத்தப்படுகின்றன.ஆனால் பெருந்தோட்டப்பகுதிகள் மக்களுக்கு தோட்டபுற சமூகமானது நாட்டின் ஒதுக்கப்பட்ட சமூகங்களில் முதலிடத்திலுள்ள ஒரு சமூக மாகும்.இவர்கள் பலவிதமான பாகுபாட்டிற்கு முகம்கொடுக்கின்ற அதேவேலை நிர்வாக சேவையை அனுக முடியாதவர்களாகவும் காணப்படுகின்றார்கள்.இந்த விடயத்தில் தெற்கிலுள்ள பெருந்தோட்டப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்படைகின்றார்கள்.இவர்களுக்கான அரசியல் தலைமைத்துவம் அல்லது குறைந்த பட்சம் தொழிற்சங்க தலைமைத்துவம் கூட காணப்படுவதில்லை.ஆண்டுதோறும் கொண்டாடப்படும் உலக தொழிலாளர் தினத்தன்று இலங்கையில் தெற்கு பகுதியிலுள்ளதோட்டத்தொழிலாளர்களின் தேவைகளையும் பிரச்சினைகளையும் முன்வைத்து இம்மக்களின் விடுதலைக்காகவும்,அவர்களின் தனித்துவமான பிரச்சினைகளை முன்வைப்பதற்கும் தென்பகுதியில் பெருந்தோட்டப்பகுதிகள் ஒதுக்கப்பட்ட மக்களின் குரலாய் வெளிபடுத்தப்பட்டு மக்கள் நலன் சேவைகளை முன்னெடுக்கப்பட வேண்டுமென மேலும் கருத்து தெரிவித்துள்ளார்.
இதன் போது பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் தலைவர் அன்டன் வனத்தைய்யா மற்றும் பிரதிநிதிகள் பலரும் கலந்துக்கொண்டார்கள்.

Related Articles

Back to top button
கோவிட்19 பரவல்