முக்கிய செய்திகள்

இலங்கையின் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக அனைத்து பாடசாலைகளையும் உடனடியாக மூட அதிபர்கள் சங்கம் கோரிக்கை !

கொரொனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் பாடசாலைகளை உடனடியாக மூடுமாறு இலங்கை அதிபர்கள் சங்கம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இன்று நடத்திய ஊடகச் சந்திப்பில் பேசிய சங்கத்தின் செயலாளர் பியசிரி பெர்னாண்டோ, பாடசாலைககளை மூடாமல் விட்டால் தீங்கு விளைவிக்கும் சூழ்நிலைக்கு வழிவகுக்கும் என்று கூறினார்.

புத்தாண்டு காலத்தில் நடந்த பல கலாச்சார விழாக்கள் கொரோனா தொற்று அதிகரிக்க வழிவகுத்தள்ளன.பொதுமக்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பொறுப்பான முறையில் பின்பற்றத் தவறிவிட்டனர்.

மருத்துவமனை வளங்களின் பற்றாக்குறை காரணமாக பிள்ளகளை பாடசாலைக்கு அனுப்புவதில் பெற்றோர்கள் தயங்கக்கூடும் என்று பியாசிரி பெர்னாண்டோ கூறினார்

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி பாடசாலைகள் மீண்டும் இயங்க தொடங்கினாலும், மாணவர் வருகை குறைவாக காணப்படுவதையும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Back to top button
கோவிட்19 பரவல்