முக்கிய செய்திகள்

ஏப்ரல் 21 தாக்தலில் உயிரிழந்தவர்களுக்கு நாடளாவிய ரீதியில் மக்கள் அஞ்சலி

இன்றுடன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன.

2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தின ஆராதனைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள தேவாலயங்களை இலக்கு வைத்து தற்கொலைத் தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற இந்த தற்கொலை தாக்குதல்களினால் 250 க்கு மேற்பட்டோர் உயிரிழந்ததுடன், 500 பேர் வரை காயமடைந்திருந்தனர்.

மிலேச்சத்தனமான இந்த தாக்குதல் இடம்பெற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள தேவாலயங்கள்,கோவில்கள்,மசூதிகள், பாடசாலைகள் ​போன்றவற்றில் விசேட வழிபாட்டு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

அத்துடன், பேராயரின் கோரிக்கைக்கு அமைய காலை 8.45க்கு நாடளாவிய ரீதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
கோவிட்19 பரவல்