உள்நாட்டுசமீபத்திய

​தென் பகுதிகளில் தனியார் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை.

தென் பகுதிகளில் தனியார் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 இன்னும் வழங்கப்படவில்லை என மாத்தறை கொட்டப்பொல பிரதேச சபையின் மக்கள் விடுதலை முன்னனியின் உறுப்பினர் கதிரேசன் கண்ணன் தெரிவித்தார்.

தெனியாய பிரதேசத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்

மேலும் இப்பகுதி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை வசதிகள் எதுவும் தீர்க்கப்படாமல் பாரிய பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்வதாகவும் அரச தோட்டங்களில் 1000 ரூபா வழங்கப்பட்டுள்ள போதிலும் தனியார் தோட்டங்களில் இன்னும் வழங்கப்படவில்லை எனவும் இதனை அரசாங்கமே தீர்த்து வைக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button
கோவிட்19 பரவல்