ஜெர்மணியில் வெயில் கொடுமை தாளாமல் தண்ணீரில் தொட்டியில் ஆட்டம் போடும் பாண்டா கரடி

ஜெர்மணியில் வெயில் கொடுமை தாளாமல் குட்டி பாண்டா கரடி ஒன்று தண்ணீரில் உருண்டு புரண்ட வீடியோவை ஏராளமானோர் ரசித்து வருகின்றனர். அந்நாட்டில் தற்போது 72 டிகிரி வெப்பம் தகித்து வருகிறது என தெரிவித்தனர். இதனால் பெர்லினில் விலங்கியல் பூங்காவில் உள்ள உயிரினங்கள் வாடி வதங்கி வருகின்றனர். இந்நிலையில் அங்கு வளர்க்கப்பட்டு வரும் குட்டி பாண்ட கரடி குளிப்பதற்கு சிறிய நீச்சல் குளம் போன்ற அமைப்பு பிளாஸ்டிக்கினால் உருவாக்கப்பட்டது.

இதனை கண்டதும் உற்சாகமடைந்த பாண்டா கரடி தனக்கான நீச்சல் குளத்தில் உருண்டு புரண்டது. அதில் பெரும்பாலான நீர் வெளியில் கொட்டியது. ஆனாலும் விடாத பாண்டா குட்டி தானே தண்ணீரில் இருப்பதாக நினைத்து புற்களில் உருண்ட விளையாடியது. எனவே இதனை கண்ட உயிரியல் பூங்கா ஊழியர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். எனவே தற்போது இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.

மேலும் படிக்க

Related Articles

Back to top button
Close