ராஜித சேனாரத்னவுக்கு விளக்கமறியல்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன எதிர்வரும் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு பிரதம நீதவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்றிரவு (13) ஆஜர்படுத்தப்பட்ட போது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

ராஜித சேனாரத்ன இன்று பிற்பகல் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டார்.

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு தொடர்பாக நீதவான் நீதிமன்றத்தால் ராஜித சேனாரத்னவுக்கு வழங்கப்பட்ட பிணை மேல் நீதிமன்றத்தால் இன்று இரத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

Related Articles

Back to top button
Close