ரஷ்யாவில் கொரோனாவால் சிகிச்சைப்பெற்று வந்த 500 மருத்துவர்கள் உயிரிழப்பு: மக்களிடையே நீடிக்கும் அச்சம்.!!

மாஸ்கோ: ரஷ்யாவில் கிட்டதட்ட 500 மருத்துவர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா பாதிப்பில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது. கொரோனாவால் 5 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 7,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 500 பேர் மருத்துவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை அரசு முறையாக கையாளவில்லை என குற்றச்சாட்டுகள் நீடிக்கும் நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே ரஷ்யாவில் நிலைமை படிப்படியாக கட்டுக்குள் வருகிறது என பிரதமர் மிசுஸ்டின் கூறியுள்ளார்.

கொரோனா வைரசின் தாக்கம் உலகின் பல்வேறு நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நோய் பாதிப்பு அதிகமான நாடுகளில் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது, பிரேசில் 2 வது மற்றும் ரஷ்யா 3 வது இடத்திலும் உள்ளது. ரஷ்யாவின் ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்புகளில் நாளொன்றுக்கு 10 ஆயிரம் பேர் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் ரஷ்யாவில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 8,246 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 7,660 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 561,091 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் படிக்க

Related Articles

Back to top button
Close