ட்வீட் கார்னர்…4.25 கோடிக்கு ஏலம்!

அமெரிக்க கூடைப்பந்தாட்ட நட்சத்திரம் மைக்கேல் ஜார்டன் 1985ல் அணிந்து விளையாடிய ஷூக்கள், கொரோனா நிதி திரட்டுவதற்காக ஏலம் விடப்பட்டன. பிரபல சோத்பி நிறுவனம் நடத்திய இந்த ஏலத்தில் ஒரு ரசிகர் 4.25 கோடி ரூபாய்க்கு அவற்றை வாங்கி உள்ளார். என்பிஏ வரலாற்றிலேயே அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட ஷூக்கள் இவை தான். நைக் நிறுவனம் ஜார்டனுக்காக பிரத்யேகமாகத் தயாரித்தவை இந்த ‘ஏர் ஜார்டன் 1’ ஷூக்கள் என்பதுடன் அவரது ஆட்டோகிராபும் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

Related Articles

Back to top button
Close