இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் விமானப் படையைச் சேர்ந்த ஒருவரும் ரஷ்யாவில் இருந்து வருகைதந்த மூவரும் அடங்குவதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது அத்துடன் இன்றைய தினம் புதிதாக வைரஸ் தொற்றுக்குள்ளான 13 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். இவர்களில் 9 கடற்படையினரும் ரஷ்யாவில் இருந்து வருகைதந்த மூவரும், குவைத்தில் இருந்து நாடு திரும்பிய ஒருவரும் அடங்குகின்றனர்.

இதனையடுத்து இன்று சனிக்கிழமை மாலை ஒன்பது முப்பது மணி வரை இலங்கையில் மொத்த கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 1814 குணமடைந்து எண்ணிக்கையை 891 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை தற்போது வரை 912 பேர் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றமையும் 46 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் இலங்கையில் இதுவரை 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க

Related Articles

Back to top button
Close