இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் மோதல் குறித்து ஐ.நா.கவலை : பிரச்சனையை உன்னிப்பதாக கவனித்து வருவதாக அமெரிக்கா கருத்து!!

நியூயார்க்  : லடாக் எல்லையில் இந்தியாவும் சீனாவும் உச்சபட்சமாக கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று ஐ. நா.சபையின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ் கேட்டுக் கொண்டுள்ளார். லடாக்கில் இந்திய – சீன துருப்புகள் மோதி கொண்டதில், இரு தரப்பிலும் சேர்த்து 60க்கும் மேற்பட்ட வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றனர்.இரு தரப்பிலும் ஏற்பட்டுள்ள இந்த உயிரிழப்புகள் குறித்து தாம் ச் கவலை அடைந்துள்ளதாக ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டெரெஸ்கூறியுள்ளார்.

இரு நாட்டு துருப்புகளை எல்லையில் உச்சபட்ச கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இதே போல் இந்திய – சீன எல்லைப் பிரச்சனை உன்னிப்பாக கவனித்து வருவதாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். அமைதியான தீர்வை எட்ட அமெரிக்கா ஆதரவு அளிப்பதாகவும் அவர் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்.

தங்கள் தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக இந்தியா கூறியுள்ள நிலையில், அவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாக அமெரிக்காவின் வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்து இருக்கிறார். கடந்த ஜூன் 2ம் தேதி பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசும்போது, இந்தியா சீனா இடையேயான எல்லைப் பிரச்னை குறித்து அதிபர் டிரம்ப் ஆலோசித்து வருவதாகவும் அமெரிக்கா தெரிவித்து இருக்கிறது.  

மேலும் படிக்க

Related Articles

Back to top button
Close