இதுக்கு ஒரு முடிவே இல்லையா? :கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 70 லட்சத்தை தாண்டியது : 3 மாதங்களாக முகக்கவசம், கிருமி நாசினியுடன் அலையும் மக்கள்.

வாஷிங்டன் : உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 70 லட்சத்தை கடந்துள்ளது. உலகில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. உலகம் முழுவதும் மருத்துவ சிகிச்சையில் குணமானோரின் எண்ணிக்கையும் 34 லட்சத்து 25 ஆயிரமாக உயர்ந்துள்ளது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 19 லட்சத்து 88 ஆயிரத்தை தாண்டியுள்ளது.அமெரிக்காவில் 1 லட்சத்து 12 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். பிரேசிலில் 6 லட்சத்து 70 ஆயிரத்தையும், ரஷ்யாவில் 4 லட்சத்து 60 ஆயிரத்தையும் கொரோனா பாதிப்பு கடந்துள்ளது.ஸ்பெயின், பிரிட்டனில் கொரோனா பாதிப்பு தலா 2 லட்சத்து 80 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதுபோல மேலும் பல நாடுகளிலும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கையும், பலியானோரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்தியாவிலும் கொரோனா  காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,46,628 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இதுவரை 6929 பேர் உயிரிழந்த நிலையில் 1,19,293 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவால் உலகளவில் மோசமாக பாதித்த நாடுகள் பட்டியலில் இத்தாலி, ஸ்பெயினை ஒரே நாளில் பின்னுக்கு தள்ளிவிட்டு, 5வது இடத்துக்கு இந்தியா முன்னேறி உள்ளது. ஜான்ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தின் சர்வதேச புள்ளி விவர பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் முறையே முதல் 4 இடங்களில் உள்ளன.

மேலும் படிக்க

Related Articles

Back to top button
Close