ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல்: 17 வீரர்கள் உயிரிழப்பு

காபூல்: ஆப்கானிஸ்தானில் ராணுவத்தினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 17 வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தலீபான் பயங்கரவாதிகள் ராணுவ முகாம்கள், சோதனைச் சாவடிகள் உள்ளிட்டவற்றை குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து தாக்குதல் நடத்தும் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்துவருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள வடக்குப் பகுதியிலுள்ள ஜாவ்ஷான் மாகாணத்தில் பாலாகிஷார் என்ற இடத்தில் உள்ள முகாம் மீது தலீபான் பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். 10 க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் ராணுவ முகாமை சுற்றி வளைத்து துப்பாக்கியால் சுட்டும் கையெறி குண்டுகளை வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்களுக்கு ராணுவ வீரர்கள் பதிலடி கொடுத்துள்ளனர். பல மணி நேரத்திற்கு பிறகு துப்பாக்கிச்சண்டை முடிவுக்கு வந்தது. அதில் துப்பாக்கிச்சண்டையில் 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 5 வீரர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும் பயங்கரவாதிகள் தரப்பில் 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதை தொடர்ந்து மற்றொரு இடத்தில்  பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 ராணுவ வீரர்களும், 4 பயங்கரவாதிகளும் உயிரிழந்துள்ளது.

மேலும் படிக்க

Related Articles

Back to top button
Close